மார்ட்டின் ரூ.451 கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை முடிவை!
10 ஆனி 2026 புதன் 13:22 | பார்வைகள் : 1357
ரூ.451 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததை எதிர்த்து லாட்டரி மார்ட்டின் குடும்பத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி லீமா ரோஸ், மகள் டெய்ஸி ஆதவ் மற்றும் மார்ட்டின் மகன் சார்லஸுக்கு சொந்தமான நிறுவனங்கள் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு, அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடத்தியதாக கூறி பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் மார்ட்டின் குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அதை எதிர்த்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire