சூர்யாவின் 50வது படத்தை இயக்கப்போவது இவரா?
10 ஆனி 2026 புதன் 13:31 | பார்வைகள் : 1410
பல வருடங்களுக்கு பின் சூர்யாவுக்கு கருப்பு திரைப்படம் மூலம் ஒரு சூப்பர் ஹிட் படம் கிடைத்திருக்கிறது. கருப்பு திரைப்படம் 300 கோடிக்கு மேல வசூல் செய்து சாதனை படைத்து விட்டது. இது சூர்யாவின் 46வது திரைப்படமாகும்.
அடுத்து தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் சூர்யாவின் 47வது திரைப்படமாக வெளியாகவுள்ளது. அதன்பின் மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் அவரின் 48வது படமாக வெளியாகவுள்ளது.
அதேபோல் சூர்யாவின் 49ஆவது திரைப்படத்தை ஜெய் பீம், வேட்டையன் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இயக்கவிருக்கிறார். சென்னையில் புகழ்பெற்ற 5 ரூபாய் டாக்டரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவிருக்கிறது.
இந்நிலையில், சூர்யாவின் 50-வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 50வது படத்தின் இயக்குனரை முடிவு செய்யும் வேலையில் சூர்யாவும் இறங்கியிருக்கிறாராம். அனேகமாக தெலுங்கு பட இயக்குனர் ரவி அணில் புடி சூர்யாவின் 50 வது திரைப்படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire