தவெக உடன் கூட்டணி குறித்து பொதுக்குழுவில் முடிவு: துரை வைகோ
11 ஆனி 2026 வியாழன் 10:22 | பார்வைகள் : 1115
உள்ளாட்சித் தேர்தலில் த.வெ.க., கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது குறித்து ம.தி.மு.க., பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என துரை எம்.பி., கூறினார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அவரளித்த பேட்டி: தமிழக அரசு மின்வெட்டுக்கான பிரச்னைகளை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். அரசு கேபிளில் இருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். தி.மு.க., கூட்டணியில் இருந்து இன்னும் ம.தி.மு.க., வெளியேறவில்லை.
ஒரு கட்சியின் உறுப்பினர், ராஜினாமா செய்து மற்றொரு கட்சியில் உறுப்பினராக சேர்ந்து அக்கட்சி சின்னத்தில் போட்டியிடுவது துரதிருஷ்டவசமானது. அதை தான் மனவேதனை என கூறினேன். தி.மு.க., கூட்டணியில் இருந்தது தவறு எனக்கூறியது இல்லை.
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி த.வெ.க., கூட்டணியில் இணைவது குறித்து ஜூன் 27ல் நடக்கும் ம.தி.மு.க., பொதுக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும்.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இருந்த போதைபொருட்கள் நடமாட்டம் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கிறது. அரசு சிங்கப்பெண் அதிரடிப்படை உருவாக்கியதை வரவேற்கிறேன் என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire