நேர்மையாக செயல்படும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
11 ஆனி 2026 வியாழன் 10:25 | பார்வைகள் : 1252
மாநகராட்சிகள், நகராட்சிகளில் நகரமைப்பு திட்ட அதிகாரிகள் உட்பட அனைவரும் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்' என, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு பின், நகராட்சி நிர்வாகத் துறைக்கு தனி யாக அமைச்சர் இல்லாமல், அத்துறையை முதல்வர் விஜய் தன் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளார்.
தி.மு.க., ஆட்சியில் இருந்த அத்துறையின் செயலர், மாநகராட்சி கமிஷனர்கள், நகராட்சி கமிஷனர்கள், நகரமைப்பு திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் மாற்றப்பட்டு, புதி தாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இந்த துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடத்திய முதல்வர் விஜய், அதில் பங்கேற்ற அதிகாரிகளிடம் கூறியுள்ளதாவது:
நீங்கள் அனைவரும் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் செயல்படலாம். உங்களுக்கு த.வெ.க., தரப்பில் எவ்வித அரசியல் தலையீடும் இருக்காது. அவ்வாறு இருந்தால், நேரடியாக துறை செயலர் வாயிலாக, எனக்கு தெரியப்படுத்தலாம்.
அமைச்சர், ஆளும் கட்சியினருக்காக விதியை மீறி, வளைந்து கொடுக்க வேண்டாம். இதை மீறி, அதிகாரிகள் தவறு செய்தது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நகராட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளில், யார் யார் கமிஷன் பெறக் கூடியவர்கள் என்ற பட்டியல் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. அதன் அடிப்படையில், மாநிலம் முழுதும் பணியிட மாறுதல் விரைவில் நடக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire