Paristamil Navigation Paristamil advert login

எலான் மஸ்க் நிறுவனங்களை தாக்குதல் பட்டியலில் சேர்த்த ஈரான்

எலான் மஸ்க் நிறுவனங்களை தாக்குதல் பட்டியலில் சேர்த்த ஈரான்

12 ஆனி 2026 வெள்ளி 13:59 | பார்வைகள் : 2041


ஈரான் அரசு, எலான் மஸ்க்கிற்கு சொந்தமான SpaceX மற்றும் செயற்கைக்கோள் இணைய சேவையான Starlink ஆகியவற்றை மத்திய கிழக்கில் இராணுவ இலக்கு பட்டியலில் சேர்த்துள்ளது.

ஈரான் அரசின் தகவலின்படி, Starlink மற்றும் மஸ்கின் மற்ற தொழில்நுட்பங்களும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, இஸ்ரேல், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் உலா Starlink நிலையங்கள் தாக்குதலுக்கான இலக்குகளாக கருதப்படுகின்றன.

SpaceX-ல் முதலீடு செய்த நிறுவங்களும், அபுதாபியை தலைமையிடமாகக் கொண்ட AlphaDhabi மற்றும் Mubadala போன்ற நிறுவங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

எலான் மஸ்க் நிர்வகிக்கும் நிறுவனங்களுடன் தொடர்புடைய அனைத்து வசதிகளையும் தக்க உரிமை உண்டு என ஈரான் எச்சரித்துள்ளது.

Starlink, ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைன் படைகளுக்கு இணைய சேவையை வழங்கியதாகவும், அதே தொழில்நுட்பம் ட்ரோன்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவக்கூடியதாகவும் இருந்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு முன், ஈரான் புரட்சிகர காவல்படை, Nvidia, Apple, Microsoft, Google போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களையும் குறிவைத்த்து எச்சரித்திருந்தது.

இந்த நடவடிக்கை, அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

 

5 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3