‘Prime d’activité’ திட்டத்தில் பெரிய மாற்றம்: பகுதி நேர பணியாளர்களுக்கு கூடுதல் நன்மை!!
12 ஆனி 2026 வெள்ளி 17:58 | பார்வைகள் : 4270
குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கான “Prime d’activité” எனப்படும் அரசின் உதவித் தொகை தொடர்பாக வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில், பயிற்சி பணியில் உள்ள (Apprentis) சிலருக்கு இனிமேல் இந்த உதவித் தொகை வழங்க வேண்டாம் என்று Cour des comptes பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக, குறைந்தபட்ச ஊதியத்தின் 78 சதவீதத்திற்கும் அதிகமாக சம்பளம் பெறும் பயிற்சி தொழிலாளர்களுக்கு இந்த உதவித் தொகை தேவையில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை செனட் நிதிக் குழுவின் கோரிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த உதவித் திட்டம், குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்கும் உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் சுமார் 11 பில்லியன் யூரோக்கள் செலவாகும் இந்தத் திட்டம், முழுநேர பணியாளர்களின் வறுமை நிலையை குறைப்பதில் முக்கிய பங்கு வகித்தாலும், பகுதி நேர பணியாளர்களுக்கு போதிய பயன் அளிக்கவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பகுதி நேர வேலை செய்பவர்களையும் திட்டத்தில் அதிகமாக இணைக்க வேண்டும் என அறிக்கை வலியுறுத்தியுள்ளது. தற்போதுள்ள விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச ஊதியத்தின் 50 சதவீதம் பெறுபவர்களுக்கே கூடுதல் போனஸ் வழங்கப்படுகின்றது. இதனை சம்பளத்திலிருந்தே வழங்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இதனால் ஏற்படும் கூடுதல் செலவை சமநிலைப்படுத்துவதற்காக உயர் வருமானம் பெறுவோருக்கான உதவித் தொகையை குறைக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire