ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த இனி கட்டணம் வசூலிக்கப்படும் - ஈரானின் அறிவிப்பு
13 ஆனி 2026 சனி 17:47 | பார்வைகள் : 1817
ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
உலகளாவிய கப்பல் போக்குவரத்தின் முக்கிய நீர்வழித் தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் இனி தடையற்ற போக்குவரத்து என்பது நடைபெறாது என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.
சமீபத்தில் ஈரானிய அரசு ஊடகத்தில் பேசிய அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்தும் கப்பல்களுக்கு இனி கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டமிட்டு வருவதாக தெரித்தார்.
மேலும், ஹார்முஸ் விவகாரம் மற்றும் அதன் மீதான கட்டுப்பாடுகள் என்பது ஈரானின் தேசிய பாதுகாப்பு வியூகத்தின் முக்கிய அங்கம் என்றும் அமைச்சர் அராக்சி விவரித்துள்ளார்.
போருக்கு முன்னால் இருந்தால் நிலைமைகள் ஹார்முஸில் இனி இருக்காது, அதன் செயல்பாட்டில் நிரந்தர மாற்றம் ஏற்பட்டு விட்டதாகவும் அமைச்சர் அராக்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி மீது எங்களின் வாள் எப்போதும் தொங்கிக் கொண்டு இருக்கும், ஹார்முஸ் ஜலசந்தி என்பது ஈரான் மற்றும் ஓமனின் இறையாண்மைக்கு உட்பட்டது என வலியுறுத்தியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire