Air France: கேபின் பொதிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூல்!!
13 ஆனி 2026 சனி 22:20 | பார்வைகள் : 2847
2018 முதல் பல குறைந்த செலவிலான விமான நிறுவனங்கள் கேபின் பயண பொதிகளுக்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கின. முதலில் Ryanair மற்றும் Wizz Air இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தின. பின்னர் easyJet மற்றும் Transavia போன்ற நிறுவனங்களும் இதைப் பின்பற்றின. இதனால் பயணிகள் கேபின் பொதியை எடுத்துச் செல்ல கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்போது இந்த நடைமுறை பாரம்பரிய விமான நிறுவனங்களுக்கும் பரவியுள்ளது. Air France, KLM மற்றும் Lufthansa போன்ற நிறுவனங்கள் "Economy Basic" என்ற புதிய குறைந்த விலை கட்டண வகையை அறிமுகப்படுத்தியுள்ளன. இதில் சிறிய தனிப்பட்ட பொருள் மட்டுமே இலவசமாக அனுமதிக்கப்படுகிறது; கேபின் பொதிகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
Air France நிறுவனம் 2025 முதல் சில குறிப்பிட்ட நடுத்தர தூர வழித்தடங்களில் இந்த புதிய கட்டண முறையை அமல்படுத்தியுள்ளது. முன்பு ஒரு கேபின் பொதியும் ஒரு கைப்பையும் இலவசமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்ந்தெடுக்கப்படும் கட்டண வகையைப் பொறுத்து இந்த சலுகை மாறுகிறது. இதை நுகர்வோர் அமைப்புகள் பயணிகளின் உரிமைகளில் பின்னடைவு எனக் கருதுகின்றன.
தற்போது இந்த முறை அனைத்து விமானங்களிலும் அமல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் உள்ளது. காரணம், பயண பொதிகளுக்கான கூடுதல் கட்டணங்கள் விமான நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை அளிக்கின்றன. 2023 ஆம் ஆண்டில் மட்டும் இந்தக் கட்டணங்கள் உலகளவில் சுமார் 33 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை ஈட்டித் தந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire