இன்டர்போல் சிவப்பு அறிவிப்பில் இருந்த பிரெஞ்சு நபர் கைது!!
14 ஆனி 2026 ஞாயிறு 07:30 | பார்வைகள் : 3122
கொலம்பியாவில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நபர் Sonner Nusret என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். “எல் பிரான்சேஸ்” என்ற பெயரில் அறியப்படும் இவர் மீது Interpol அமைப்பு சிவப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
கொலம்பியாவின் மெடெலின் நகரில் கடந்த ஜூன் மாதம் 12ம் திகதி நடைபெற்ற விசேட நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பாவுக்கு கடல் மற்றும் வான்வழியாக போதைப்பொருட்களை கடத்திய சர்வதேச குற்றவியல் அமைப்பின் தலைவராக இவர் செயல்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலம்பியா, மெக்சிகோ, டொமினிக்கன் குடியரசு மற்றும் தாய்லாந்து வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பரிஸில் உள்ள தேசிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் தடுப்பு பிரிவு அவருக்கு எதிராக கைது நடவடிக்கை பிறப்பித்திருந்தது.
இதற்கு முன்னர், போதைப்பொருள் தடுப்பு பிரிவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 2025 செப்டெம்பர் மாதம் பெர்பின்யான் பகுதியில் சுமார் 1,808 கிலோ கொக்கெய்ன் கலந்த குவினோவா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. கைது செய்யப்பட்ட நபர் மீது முன்பும் கொலை முயற்சி மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் உள்ளதாக காவல்துறை தரப்புகள் தெரிவித்துள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire