உக்ரைனில் ரஷ்யா பயங்கர வான்வழித் தாக்குதல் - 11 பேர் பலி
16 ஆனி 2026 செவ்வாய் 11:54 | பார்வைகள் : 1336
உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா திங்கள்கிழமை அதிகாலை நடத்திய பயங்கர வான்வழித் தாக்குதலில் 11 போ் உயிரிழந்துள்ளதுடன் 53 போ் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் 2-ஆவது பெரிய நகரான காா்கிவ் ஆகியவற்றை உலுக்கிய இத்தாக்குதலில், கீவ் நகரில் மட்டும் 5 பொதுமக்கள் மற்றும் மீட்புப் பணியாளா்கள் உயிரிழந்தனா். அங்குள்ள 25 அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகங்கள் தீக்கிரையாகின.
குறிப்பாக, 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த உலகப் புகழ்பெற்ற ‘யுனெஸ்கோ’ பாரம்பரிய ஆன்மிக தலமான பெச்சொ்ஸ்க் லாவ்ரா தேவாலயம் மேற்கூரை தீப்பற்றி எரிந்து, சேதமடைந்தது.
ரஷ்யா ஒரே இரவில் 70 ஏவுகணைகள் மற்றும் 611 ட்ரோன்களை ஏவியதாகவும், அதில் 50 ஏவுகணைகள் மற்றும் 582 ட்ரோன்களை தாங்கள் வீழ்த்தியதாகவும் உக்ரைன் அறிவித்தது.
பிரான்ஸில் ‘ஜி7’ உச்சிமாநாடு தொடங்கியுள்ளதையொட்டி, அதற்கு முன்னதாக ரஷ்ய அதிபா் விளாதிமீா் புதின், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஆகியோருடன் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தனித்தனியாக தொலைபேசியில் உரையாடிய மறுநாளே இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire