லோகேஷ் கனகராஜின் புதிய அதிரடி!
13 வைகாசி 2026 புதன் 13:06 | பார்வைகள் : 1893
மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, இன்று விஜய், கமல்ஹாசன், ரஜினிகாந்த் எனத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்த கட்டமாகத் திரைக்கு முன்னால் நடிகராகத் தடம் பதிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவர் நாயகனாக நடிக்கும் டிசி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உலக அளவில் அதிகரித்துள்ளது.
'டிசி' திரைப்படத்தின் டிரைலர் வருகிற மே 15-ம் தேதி, பிரான்சில் நடைபெறும் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. ஒரு தமிழ் நடிகரின் அறிமுகப் பட டிரைலர் சர்வதேச அரங்கில் இத்தகைய முக்கியத்துவத்துடன் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
இந்தத் திரைப்படம் ஒரு வயலண்ட் ரொமாண்டிக் ஆக்ஷன் டிராமா பாணியில் உருவாகியுள்ளது. இதில் லோகேஷ் கனகராஜ் தேவதாஸ் என்ற வேடத்தில் நடிக்கிறார். பாலிவுட் நடிகை வாமிகா கபி சந்திரா என்ற கதாபாத்திரத்திலும், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பார்வதி என்ற வேடத்தில் நடித்துள்ளனர்.
சாணி காயிதம், கேப்டன் மில்லர் படங்களின் மூலம் தனது தனித்துவமான மேக்கிங்கை வெளிப்படுத்திய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு லோகேஷின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான டீசரில் அனிருத்தின் பின்னணி இசை மிகப்பெரிய அளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire