தமிழக பா.ஜ.,வை வளர்க்க மேலிட நிர்வாகி அறிவுரை
14 வைகாசி 2026 வியாழன் 13:19 | பார்வைகள் : 1438
தொண்டர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்களை சந்தித்து, கட்சி வளர்ச்சி பணியில் ஈடுபட வேண்டும் என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளை, தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ., அலுவலகத்தில், மூத்த நிர்வாகிகளுடன் நேற்று, பி.எல்.சந்தோஷ் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அவர் கூறியுள்ளதாவது:
தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வினர் இன்னும் சிறப்பாக பணியாற்றி இருக்க வேண்டும். மேற்கு வங்கத்திலேயே பா.ஜ., ஆட்சியை பிடித்து விட்டது. அடுத்து, பா.ஜ., மேலிட தலைவர்களின் முழு கவனமும் தென் மாநிலங்களின் பக்கம் தான் திரும்பியுள்ளது. தமிழக வெற்றிக்கழக அரசின் பல செயல்பாடுகள், தி.மு.க.,வை பின்பற்றியே இருக்கின்றன.
இது, பா.ஜ.,வுக்கான வாய்ப்பை தானாகவே உருவாக்கும். எனவே, ஒவ்வொரு நிர்வாகியும் தங்கள் பகுதியில் உள்ள தொண்டர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்களை சந்தித்து, கட்சி வளர்ச்சி பணியில் ஈடுபட வேண்டும். மக்கள் பிரச்னைகள் தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு சந்தோஷ் பேசியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire