வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு - 5 ஆண்டுகளில் இல்லாத உயர்வு!!
14 வைகாசி 2026 வியாழன் 07:30 | பார்வைகள் : 1992
வேலைவாய்ப்பின்மை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக Institut national de la statistique et des études économiques வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக பொருளாதார மந்தநிலை மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்டுள்ள சவால்கள் இந்த உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகின்றன.
அறிக்கையின் படி, தற்போது சுமார் 26 இலட்சம் மக்கள் வேலை இன்றி உள்ளனர். கடந்த காலாண்டை விட இது 68 ஆயிரம் அதிகமாகும். குறிப்பாக 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை 21.1 சதவீதமாக உயர்ந்துள்ளமை கவலை அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 25 முதல் 49 வயதுக்குட்பட்டோரிடமும், 50 வயதுக்கு மேற்பட்டோரிடமும் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண்களுக்கான வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.5 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், பெண்களுக்கான விகிதம் 7.7 சதவீதமாக காணப்படுகிறது. நீண்டகாலமாக வேலை இன்றி இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் வேலைவாய்ப்பு நிலையை சீரமைப்பதற்காக அரசு விரைவான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan