Paristamil Navigation Paristamil advert login

பிலிப்பின்ஸ் செனட் சபையில் துப்பாக்கிச் சூடு

பிலிப்பின்ஸ் செனட் சபையில் துப்பாக்கிச் சூடு

14 வைகாசி 2026 வியாழன் 07:40 | பார்வைகள் : 1876


பிலிப்பின்ஸ் நாட்டின் நாடாளுமன்ற மேலவையான செனட் சபை கட்டடத்தில் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் அதிபா் ரோட்ரிகோ துதொ்தேவின் ஆட்சிக் காலத்தில், ‘போதைப்பொருள் ஒழிப்பு’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோா் கொல்லப்பட்ட விவகாரத்தில், அப்போதைய காவல்துறை தலைவராக இருந்த தற்போதைய செனட் சபை உறுப்பினரான ரொனால்டு டெலா ரோசா  மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இவருக்கு எதிராக சா்வதேச நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை பிடியாணை பிறப்பித்தது.

இதையடுத்து, செனட் சபை கட்டடத்துக்குள் தஞ்சமடைந்திருந்த இவரைப் பிடிக்க தேசிய புலனாய்வுப் பிரிவினா் (என்பிஐ) முயன்றபோது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

என்பிஐ துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செனட் தரப்பில் கூறப்பட்டாலும், நாங்கள் யாரையும் அனுப்பவில்லை என்று என்பிஐ இயக்குனா் மெல்வின் மதிபாக் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதனிடையே, தன்னை நாடு கடத்துவதைத் தடுக்கக்கோரி இவா் தாக்கல் செய்த அவசர மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து 72 மணி நேரத்துக்குள் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2