தமிழக அமைச்சரவையில் சேர தவெகவிடம் இருந்து அழைப்பு
15 வைகாசி 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 1678
தமிழக அமைச்சரவையில் சேருவதற்கு தவெகவிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறி உள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் கைகோர்த்திருந்த காங்கிரஸ் தேர்தல் முடிவுக்கு பின் அணி மாறியது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அளித்தது. அப்போது காங்கிரசுக்கு அமைச்சர்கள் பதவி வழங்கப்படும் என்று தவெக தரப்பில் இருந்து உறுதிமொழி அளிக்கப்பட்டது.
தனிபெரும்பான்மையுடன் இருந்த தவெக, நம்பிக்கை ஓட்பெடுப்பில் வெற்றி பெற்றதால், அதற்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு அமைச்சர்கள் பதவி தர ஆலோசித்து வருகிறது. அதன் படி, முதலில் கூட்டணியில் இணைந்த காங்கிரசுக்கு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது. இந்த விவரத்தை தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்துஅவர் மேலும் கூறியதாவது;
தமிழகத்தில் தவெக கூட்டணியில் இருக்கும் காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம்பெற முறைப்படி அழைப்பு வந்துள்ளது. தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இம்முறை இடம்பெறுவது உறுதி. வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனது பலத்தை வெளிப்படுத்தும்.
இவ்வாறு கிரிஷ் சோடங்கர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire