Val-d’Oise பகுதியில் 4 மணி நேர சோதனையில் உரிமம் இல்லாமல் ஓட்டிய 23 பேர் கைது, 32 பேருக்கு காப்பீடு இல்லை!!
14 வைகாசி 2026 வியாழன் 20:51 | பார்வைகள் : 2588
இந்த நீண்ட Ascension விடுமுறைக்கு முன் நடத்தப்பட்ட சாலை கண்காணிப்பு நடவடிக்கையில், மாவட்ட ஜொந்தாமெரி அதிகாரிகள் சாலை விதிமுறைகளை மீறிய 350 குற்றச்செயல்களை பதிவு செய்தனர். சுமார் பத்து பேர் போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டியதும் கண்டறியப்பட்டது.
ஜொந்தர்மெரி படையினரின் பங்கேற்பு மிகவும் அதிகமாக இருந்தது; அதன் முடிவுகள் கவலைக்கிடமாக இருந்தன. சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், Val-d’Oise பகுதியில் பல முக்கிய சாலைகளில் விரிவான சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையில் 70 சோதனை மையங்களில் ஒரே நேரத்தில் 330 அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்கள் முக்கிய சாலைகள் மட்டுமல்லாமல், Transilien Line H ரயில் பாதைகள் மற்றும் நீர்வழிகளிலும் கண்காணிப்பு மேற்கொண்டனர்.
சோதனையின் முடிவில் பெரும்பாலான குற்றங்கள் சாலைப் போக்குவரத்துடன் தொடர்புடையதாக இருந்து, மொத்தம் 350 விதிமுறை மீறல்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில், ஒரே நாளில் 23 பேர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதும், 32 பேர் காப்பீடு இல்லாமல் வாகனம் இயக்கியதும் கண்டறியப்பட்டது. இதன் விளைவாக சுமார் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த அனைத்தும் வெறும் 4 மணி நேர சோதனையிலேயே நடந்தது.
மேலும், போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டிய சுமார் பத்து பேரை அதிகாரிகள் கட்டுப்படுத்தினர். ரயில் பாதைகளிலும் சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சோதனையின் முடிவில் நான்கு பேர் காவலில் வைக்கப்பட்டனர். தேடப்பட்ட நபர்கள் பட்டியலில் இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
இந்த பெரிய அளவிலான நடவடிக்கைக்காக, Gendarmerie nationale அமைப்பிற்கு Maisons-Alfort நகரிலிருந்து வந்த ஜொந்தாமெரி படையினர், Beynes பகுதியில் இருந்து வந்த நாய் விசாரணைப் பிரிவு குழுக்கள், Roissy–Charles-de-Gaulle Airport விமான நிலைய போக்குவரத்து ஜொந்தாமெரி அதிகாரிகள், மேலும் Val-d’Oise பகுதி ரிசர்வ் படையினரும் Garde Républicaine உறுப்பினர்களும் உதவி செய்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire