Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து விமானம் தீப்பற்றி எரிந்தது - 2 பேர் பலி

அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து விமானம் தீப்பற்றி எரிந்தது - 2 பேர் பலி

15 வைகாசி 2026 வெள்ளி 12:57 | பார்வைகள் : 1659


சிறிய ரக விமானமொன்று வீடொன்றின் மீது விழுந்து தீப்பற்றி எரிந்ததில் விமானத்தில் இருந்த 2 பேரும் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (14) அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின்க ஒஹியோ மாகாணத்தின் அக்ரான் விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை 4 மணியளவில் புறப்பட்ட இந்த விமானத்தில் 2 பேர் பயணித்தனர்.

விமான நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் வானில் பறந்துகொண்டிருந்த விமானம் நிலை தடுமாறி, அக்ரான் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது விழுந்துள்ளது.

கீழே விழுந்து விபத்துக்குள்ளான விமானம் தீப்பற்றி எரிந்துள்ளது.

இதில் விமானத்துக்குள்ளிருந்த இரண்டு பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான மேலதிக விசாரணைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

1 நாள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : -

இறப்பு : 17 Aug 2026