மக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக சிறிதளவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு
16 வைகாசி 2026 சனி 09:04 | பார்வைகள் : 1623
மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காகவே சிறிதளவே பெட்ரோல், டீசல் விலைகளை பிரதமர் உயர்த்தி உள்ளார் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பீயூஷ் கோயல் கூறி உள்ளார்.
மும்பையில் அவர் அளித்த பேட்டி;
உலக நாடுகள் மத்தியில் நம் நாட்டின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி உள்ளார். அவர் கட்டமைத்து இருக்கும் நல்லுறவுகள் எதிரொலியாக நம் நாட்டின் பாஸ்போர்ட்டுக்கான மதிப்பு அயல்நாடுகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வெளிநாட்டு தலைவர்கள் நம் நாட்டை ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக பார்க்கின்றனர். இந்தியாவில் முதலீடு செய்வதற்கான அளப்பரிய வாய்ப்புகளை கொடுத்துள்ளது.
நாட்டு மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என்பதை பிரதமர் மோடி மனதில் கொண்டுள்ளார். ஆகவே தான் அவர் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலைகளை சிறிதளவே உயர்த்தி உள்ளார். அந்த சுமையை 90 சதவீதம் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு இருக்கிறது.
இவ்வாறு பீயூஷ் கோயல் கூறினார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire