இந்தியாவில் யு.ஏ.இ., செய்யும் முதலீடு ரூ.48,000 கோடி!
16 வைகாசி 2026 சனி 11:28 | பார்வைகள் : 1765
பிரதமர் மோடி மேற்கொள்ளும் ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு நேற்று சென்று, அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் பலனாக, எரிசக்தி தேவையில் ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவின் உட்கட்டமைப்பு, நிதித்துறை ஆகியவற்றில் 48,000 கோடி ரூபாய் முதலீடு ஆகிய முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கான சுற்று பயணத்தை நேற்று தொடங்கினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.
இந்நிலையில், முதல் கட்டமாக யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபிக்கு நேற்று பிரதமர் மோடி சென்றார். யு.ஏ.இ., அதிபர் அல் நஹ்யான் விமான நிலையத்திற்கு நேரில் சென்று சிறப்பான வரவேற்பு அளித்தார்.
அதன் பின், இரு தலைவர்கள் இடையே உயர்மட்ட பேச்சு நடந்தது. ஹார்முஸ் ஜலசந்தி வழியிலான பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்திற்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
எமிரேட்ஸ் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார். மேலும், ஈரான்- போரின் போது இந்தியர்களுக்கு யு.ஏ.இ., அளித்த கவனிப்பு மற்றும் பாதுகாப்புக்காக நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் இந்தியா - யு.ஏ.இ., இடையே எரிசக்தி, ராணுவம், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் முக்கிய அம்சமாக பிரதமரின் ஒரு நாள் பயணத்தில், 48,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய யு.ஏ.இ., சம்மதித்துள்ளது
இந்தியா - யு.ஏ.இ., இடையே கையெழுத்தான ஒப்பந்தங்களின் விபரம்:
ராணுவ ஒத்துழைப்பு
இந்தியா மற்றும் யு.ஏ.இ., இடையே ராணுவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் வெறும் ராணுவப் பயிற்சிகளுக்கு மட்டும் அல்லாமல், பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் கூட்டாக இணைந்து மேம்படுத்துவது மற்றும் உற்பத்தி செய்வது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது.
மேலும், இரு நாடுகளுக்கு இடையே உளவுத்தகவல் பகிர்வு, கடல் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இந்த ஒப்பந்தம் வலுவான இணைப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
எரிசக்தி
இந்தியாவில் உள்ள அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சேமிப்பை 3 கோடி பீப்பாய்களாக உயர்த்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
மத்திய அரசின் ஐ.எஸ்.பி.ஆர்.எல்., நிறுவனம் இதை நிர்வகிக்கும். இதற்கு அபுதாபி நிறுவனம் கட்டணம் செலுத்தும். இதன் விற்பனையில் இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் இடையே சமையல் எரிவாயு வினியோகத்துக்கான நீண்டகால ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடல்சார் ஒத்துழைப்பு
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire