தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு
16 வைகாசி 2026 சனி 13:29 | பார்வைகள் : 2003
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார்.
அன்றைய தினமே 9 த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் இதுவரை அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது.
இந்த சூழலில் இன்று முதல்-அமைச்சரின் தனி செயலாளர் செந்தில்குமார், கவர்னர் மாளிக்கைக்கு சென்று தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அமைச்சரவை விரிவாக்கம், நிர்வாக விவகாரங்கள் மற்றும் இலாகா ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி முதல்-அமைச்சர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துறைகள் பின்வருமாறு;-.
முதல்-அமைச்சர் விஜய் - பொது நிர்வாகத்துறை, உள்துறை, காவல் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், மகளிர் நலம், இளைஞர் நலம், குழந்தைகள் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் வழங்கல்.
அமைச்சர் செங்கோட்டையன் - நிதித்துறை
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமர் - மின்சாரம், மற்றும் நீதித்துறை
அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் - சுகாதாரத்துறை, மருத்துவ கல்வி, குடும்பநலத்துறை
அமைச்சர் ஆனந்த் - ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை
அமைச்சர் கீர்த்தனா - தொழில்துறைஅமைச்சர் டி.கே.பிரபு - இயற்கை வளத்துறை
அமைச்சர் ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை, தமிழ்வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை
அமைச்சர் வெங்கராமன் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire