இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால்: பாக்.,கிற்கு ராணுவ தளபதி எச்சரிக்கை
17 வைகாசி 2026 ஞாயிறு 07:14 | பார்வைகள் : 1826
இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை தொடர்ந்து ஊக்குவித்தால், புவியியல் மற்றும் வரலாற்றில் ஒரு அங்கமாக தொடர்ந்து இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை பாகிஸ்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார்.
டில்லியில் உள்ள மானேக்ஷா மையத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி பங்கேற்றார்.
அப்போது ஆப்பரேஷன் சிந்தூர் துவங்க காரணமான சூழ்நிலை மீண்டும் உருவானால் ராணுவம் என்ன செய்யும் என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த உபேந்திர திவேதி கூறியதாவது:
இதற்கான பதிலை நான் முன்னரே கூறியுள்ளேன். பாகிஸ்தான், தொடர்ந்து பயங்கரவாதிகளை உருவாக்கி இந்தியாவிற்கு எதிராக செயல்பட வைக்குமானால், புவியியல் மற்றும் வரலாற்றின் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை அந்நாடு தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire