யாரும் சென்றிராத உயரத்தை எட்டியது இந்தியா: நெதர்லாந்தில் பிரதமர் மோடி பெருமிதம்
17 வைகாசி 2026 ஞாயிறு 08:57 | பார்வைகள் : 1477
இந்தியா இதுவரை யாரும் சென்றிராத இடத்தை அடைந்தது என நெதர்லாந்தில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசுகையில் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நெதர்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடிக்கு ஹேக் நகரில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா - நெதர்லாந்து ஆகிய இருநாடுகளுக்கும் இடையேயான உறவு வளர்ச்சி அடைந்து அடைகிறது. இந்தியர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும், அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை மறப்பதில்லை. 140 கோடி இந்தியர்கள் சார்பில் நெதர்லாந்து மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். நான் இப்பொழுது இந்தியாவில் பண்டிகை கொண்டாட்டத்தில் இருப்பது போல் உணர்கிறேன்.
இங்குள்ள மக்களின் உற்சாகத்தை பார்த்து நான் தெதர்லாந்தில் இருப்பதையே மறந்துவிட்டேன். பல்வேறு துறைகளில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி மற்றும் சாதனைகளின் சகாப்தத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. இந்தியா இதுவரை யாரும் சென்றிராத இடத்தை அடைந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், உலகின் மிகப்பெரிய ஏஐ தொடர்பான உச்சிமாநாட்டையும், ஜி20 உச்சிமாநாட்டையும் இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. மிக முக்கியமாக, விண்வெளி ஆய்வில் இந்தியா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.
யாரும் சென்றிராத நிலவை நாடு அடைந்துள்ளது. இங்கு ராஜஸ்தான், அசாம், மஹாராஷ்டிரா மாநில மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. பலதரப்பட்ட கலாசார பின்னணி கொண்ட மக்கள் நெதர்லாந்தில் வசிக்கின்றனர். மே 16ம் தேதியான இன்று மிகவும் மகத்துவம் மிக்க நாள். சரியாக 12 ஆண்டுகளுக்கு முன் 2014ம் ஆண்டு இதே நாளில் தான் லோக்சபா தேர்தல் முடிவு வெளியானது, பல ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் முழு மெஜாரிட்டியுடன் கூடிய அரசு அமைந்தது. நாட்டு மக்களின் மிகப்பெரிய ஆசீர்வாதம் எனக்கு கிடைத்துள்ளது.
நம் நாட்டு மக்கள் மிகப்பெரிய கனவு காண்கின்றனர். மிக சிறந்த இந்தியாவை உருவாக்க அளவற்ற உழைப்பும், முயற்சியும் செய்து வருகிறோம். இந்திய இளைஞர்களின் கனவு, லட்சியம் மிகப்பெரியது. உலகெங்கும் நடக்கும் மொத்த டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதிக்கும் மேல் இந்தியாவில் நடக்கிறது. நம் நாட்டில் ஸ்டார்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. அணுசக்தி துறையில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுகிறது. செமி கண்டக்டர் உற்பத்தி துறையில் மிகப்பெரிய பணி நடக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire