நெதர்லாந்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
17 வைகாசி 2026 ஞாயிறு 10:07 | பார்வைகள் : 1435
நெதர்லாந்துக்கு அரசுமுறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு மன்னர் வில்லேம் அலெக்சாண்டர் மற்றும் மகாராணி மேக்சிமாவை சந்தித்தார். இதனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுவடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து புறப்பட்டு, ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு சென்றார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நெதர்லாந்து மன்னர் வில்லேம் அலெக்சாண்டர் மற்றும் மகாராணி மேக்சிமாவை அவர் சந்தித்தார். இந்த உயர்மட்ட சந்திப்பு மூலம் இரு நாடுகளுக்கும் இடையே, பன்முகத்தன்மை கொண்ட உறவை மேலும் வலுவாக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
அரச மாளிகையில் மன்னர் வில்லேம் அலெக்சாண்டர் மற்றும் மகாராணி மேக்சிமா ஆகியோரைச் சந்தித்தேன். தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் நீர்வளம் போன்ற முக்கியத் துறைகளில் இந்தியா-நெதர்லாந்து நட்புறவை மேம்படுத்துவது ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார். ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, கண்டுபிடிப்புகள், பசுமை ஹைட்ரஜன், செமி கண்டக்டர்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே தண்ணீர் மீதான கூட்டாண்மை ஆகியவை குறித்து பிரதமர் மோடி விரிவாக விவாதிக்க உள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire