தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களை கண்டறியுங்கள்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
17 வைகாசி 2026 ஞாயிறு 13:16 | பார்வைகள் : 1553
சட்டசபை தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களை கண்டறிய வேண்டும்' என, 36 பேர் கொண்ட குழுவை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
சட்டசபை தேர்தலில், 59 இடங்களில் மட்டும் வென்று, தி.மு.க., தோல்வி அடைந்தது. மீண்டும் ஆட்சி அமைத்து விடுவோம் என, மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினருக்கு, இந்த தோல்வி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகள் குறித்து, தொகுதி வாரியாக விரிவான கள ஆய்வு செய்ய, 36 பேர் கொண்ட குழுவை, நேற்று முன்தினம் ஸ்டாலின் அறிவித்தார்.
இக்குழுவினருடன், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, துணை பொதுச்செயலர்கள் கனிமொழி, ராஜா, பொன்முடி, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த ஐந்தாண்டுகள் சிறப்பான ஆட்சியை நடத்தினோம். மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தினோம். ஏராளமான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தினோம். ஆனாலும், புதிய கட்சியிடம் தோற்றுள்ளோம்.
கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என எதிர்பார்க்கப்பட்ட, சென்னை மாநகர், புறநகர், மதுரை, துாத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தோற்றது ஆச்சரியமாக உள்ளது.
இளைஞர்கள், பெண்கள் உண்மையிலேயே, விஜய் மீதான ஈர்ப்பால் ஓட்டளித்தனரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா, இளம் தலைமுறையின் நம்பிக்கையை பெற, எங்கே தவறி விட்டோம், வெற்றியை எப்படி நழுவ விட்டோம் என்பதற்கான உண்மையான காரணங்களை கண்டறிய வேண்டும்.
தொகுதி வாரியாக, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் இளைஞர்களிடம், மனம் விட்டு பேச வேண்டும் என, ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire