இந்தியாவில் முதலீடு: நெதர்லாந்துக்கு பிரதமர் மோடி பாராட்டு
17 வைகாசி 2026 ஞாயிறு 14:17 | பார்வைகள் : 1623
இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள டாப் 5 நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்று' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
நெதர்லாந்துக்கு அரசுமுறை பயணமாக சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு மன்னர் வில்லேம் அலெக்சாண்டர் மற்றும் மகாராணி மேக்சிமாவை சந்தித்தார். தொடர்ந்து பிரதமர் ராப் ஜெட்டனையும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சு நடத்துகிறார். ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, கண்டுபிடிப்புகள், பசுமை ஹைட்ரஜன், செமி கண்டக்டர்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே தண்ணீர் மீதான கூட்டாண்மை ஆகியவை குறித்து பிரதமர் மோடி விரிவாக விவாதித்தனர்.
இருதரப்பு சந்திப்பின்போது ரதமர் ராப் ஜெட்டனுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான உறவு அபரிமிதமாக வளர்ந்துள்ளது. இந்தியாவின் முதல் ஐந்து முதலீட்டாளர்களில் நெதர்லாந்தும் இடம்பிடித்துள்ளது, இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் உறவுகள் மிகவும் ஆழமானவை
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தால், இன்று இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையேயான உறவை வளர்ச்சி அடைந்துள்ளது.
நமது நாடுகள் பல்வேறு துறைகளில் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட உதவும். நாம் இணைந்து, நமது இரு நாடுகளையும் வலுப்படுத்த லட்சியமிக்க புதுமைகளை முன்னெடுக்க முடியும். எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் சுகாதாரத் துறைகளில் முதலீடுகள் செய்ய இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன். தொழில் செய்வதை எளிதாக்கும் வழிமுறைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்தியா உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக உள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக நான் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். இந்த 12 ஆண்டுகளில், தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் மூலம், நமது பொருளாதாரத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே நாம் மாற்றியமைத்துள்ளோம். தனியார் துறைக்கு வாய்ப்புகளை வழங்குவதும் எங்களின் நோக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியாவில் செமி கண்டக்டர்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், இந்தியாவின் டாடா நிறுவனமும் நெதர்லாந்தின் ஏ.எஸ்.எம்.எல் நிறுவனமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் பிரதமர் மோடி மற்றும் நெதர்லாந்து பிரதமர் ஜெட்டன் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:
குஜராத்தின் தோலேராவில் டாடா எலக்ட்ரானிக்ஸின் செமி கண்டக்டர்கள் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கும், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் நெதர்லாந்தின் ஏ.எஸ்.எம்.எல் நிறுவனம் ஆதரவளிக்கும். செமி கண்டக்டர்கள் துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்கள், நமது தேசத்தின் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. இது, வரும் காலங்களில் வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு துறையாகும். இவ்வாறு மோடி கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire