தமிழக அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் உண்டா? செங்கோட்டையன் பதில்
18 வைகாசி 2026 திங்கள் 06:24 | பார்வைகள் : 1828
கோவை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது இந்த தகவலை அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செங்கோட்டையன் கூறும் போது, முதல்-அமைச்சர் விஜய் என்ன நினைக்கிறாரோ, அதனை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.அமைச்சரவை என்பது இப்படித்தான் இருக்கும். ஜெயலலிதா இருக்கும் போது முதலில் 7 பேரை தான் அமைச்சர்களாக போட்டார். அதன்பின்னர் படிப்படியாக விரிவாக்கம் செய்தார் .
அதேபோன்று இந்த ஆட்சியிலும் தமிழக அமைச்சரவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும். இதனை பொறுத்த வரை முதல்-அமைச்சர் நிலையில் இருந்து இயக்க வேண்டியது. எனவே அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.அதனை தொடர்ந்து அவரிடம் அ.தி.மு.க.வுக்கு அமைச்சரவையில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், நீங்கள் தான் சொல்ல வேண்டும். நாங்கள் இதுவரை ஒன்றும் சொல்லவில்லையே என்று கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire