ஹார்முஸ் பகுதியில் வர்த்தகக் கப்பல்களைக் குறிவைப்பது ஏற்க முடியாது: ஐநாவில் இந்தியா கண்டனம்
18 வைகாசி 2026 திங்கள் 10:46 | பார்வைகள் : 1574
ஹார்முஸ் பகுதியில் வர்த்தகக் கப்பல்களைக் குறிவைப்பதும், கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐநாவின் இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்தார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போரினால், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய இடம் வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் ஏற்றம் கண்டுள்ளது. இதனால், உலக நாடுகள் பலவற்றில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் ஐநாவின் சிறப்பு கூட்டத்தில் இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் பேசுகையில், ''ஹார்முஸ் பகுதியில் வணிகக் கப்பல்களைக் குறிவைப்பது, பொதுமக்கள், கப்பலில் பணிபுரிபவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பது, கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைத் தடுப்பது ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாதவை.
இது தொடர்பாக சர்வதேச சட்டம் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். இந்த நெருக்கடிக்கு பதிலளிக்க, சர்வதேச ஒத்துழைப்புடன் நடவடிக்கை அவசியமாகும்'', என்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire