ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த நரைன்- முதல் வெளிநாட்டு வீரர்
17 வைகாசி 2026 ஞாயிறு 16:33 | பார்வைகள் : 1520
ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் விளையாடிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய கொல்கத்தா வீரர் சுனில் நரைன் (Sunil Narine), 4 ஓவர்களில் 29 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்தப் போட்டி அவருக்கு 200வது ஐபிஎல் டி20 போட்டி ஆகும். இதன்மூலம் 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்தார்.
நரைன் 200 போட்டிகளில் 207 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் மற்றும் ஏழு அரைசதங்களுடன் 1820 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள்:
சுனில் நரைன் - 200
பொல்லார்ட் - 189
ஏபி டிவில்லியர்ஸ் - 184
டேவிட் வார்னர் - 184
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire