கேரளாவில் பதவியேற்கும் 20 அமைச்சர்கள்: வெளியானது பட்டியல்
18 வைகாசி 2026 திங்கள் 11:24 | பார்வைகள் : 1624
கேரளாவில் புதிய அரசு நாளை பதவியேற்க உள்ள நிலையில் 20 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அவர்களின் விவரத்தை முதல்வராக பதவியேற்கும் சதீசன் அறிவித்துள்ளார்.
கேரள சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் பதவிக்கு வி.டி.சதீசன், கே.சி.வேணுகோபால், ரமேஷ் சென்னிதாலா இடையே கடும் போட்டி நிலவியது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு முதல்வர் வேட்பாளராக வி.டி.சதீசனை காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. சதீசன் நாளை கேரள முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், சதீசன் உடன் 20 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அவர்களில் ஐந்து பேர் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள்
அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களின் விவரம்
ரமேஷ் சென்னிதாலா
சன்னி ஜோசப்
கே.முரளீதரன்
மோன்ஸ் ஜோசப்
ஷிபு பேவி ஜான்
அனூப் ஜேக்கப்
சிபி ஜான்
ஏபி அனில்குமார்விஷ்ணுநாத்
ரோஜி ஜான்
பிந்து கிருஷ்ணா
லிஜூ
சித்திக்
துளசி
ஜனீஸ்
முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த
பி.கே. குன்ஹலிகுட்டி
ஷம்சுதீன்
கே எம் ஷாஜி
பிகே பஷீர்
அப்துல் கபூர் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
சபாநாயகர்
திருவான்சூர் ராதாகிருஷ்ணன் சபாநாயகராகவும், ஷனிமோல் உஸ்மான் துணை சபாநாயகராக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் கொறடாவா நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire