அ.ம.மு.க., - அ.தி.மு.க.,வினரை மந்திரியாக்கினால் சி.பி.ஐ., விசாரணை: எச்சரிக்கிறார் தினகரன்
18 வைகாசி 2026 திங்கள் 14:52 | பார்வைகள் : 1702
அ.தி.மு.க.,வை அழிக்க, முதல்வர் விஜய் நினைப்பதாக, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் குற்றம்சாட்டினார்.
திருச்சியில் நேற்று, அவர் அளித்த பேட்டி:
தமிழக சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், தனிப்பெரும்பான்மை இல்லாமல், பல பகீரத முயற்சிகள் செய்து, ஆட்சி அமைத்துள்ளது. தமிழக மக்கள், மாற்றம் வேண்டும் என எண்ணி, வேட்பாளரே யார் என தெரியாமல், ஓட்டு போட்டுள்ளனர்.
இருப்பினும், த.வெ.க.,வுக்கு தனிப்பெரும்பான்மை வழங்காமல், எதிர்க்கட்சிகளுக்கு 126 தொகுதிகளை வழங்கி, ஜனநாயகத்தை காப்பாற்றி உள்ளனர். தனிப்பெரும்பான்மை இல்லாததால், த.வெ.க., அரசு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அ.ம.மு.க.,வின் ஒரே எம்.எல்.ஏ.,வை, முதல்வர் விஜய் அபகரித்து உள்ளார்.
இது, குதிரை பேரம் இல்லை என, விஜய் உள்ளிட்டோர் நம்புகின்றனர். ஆனால், அ.ம.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டால், நிச்சயம் குதிரை பேரம் குற்றச்சாட்டு உண்டாகும்.
இதுபோல, அ.தி.மு.க.,வை ஊழல் கட்சி என விமர்சித்த விஜய், அக்கட்சியின் 25 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெற்றுள்ளார்.
ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என நினைப்பவர்கள், அ.தி.மு.க.,வை அழிக்க நினைக்கும் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது, எந்த வகையில் நியாயம்? அ.ம.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு அமைச்சர் பதவி அளித்தால், நிச்சயமாக, நாங்கள் சி.பி.ஐ., விசாரணை கேட்போம்.
அதேபோல், அ.தி.மு.க.,வினருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டாலும், குதிரை பேரம் உறுதியாகும். அ.தி.மு.க.,வை அழிக்க, த.வெ.க.,வின் ஏஜன்ட்டாக, அமைச்சர் செங்கோட்டையன் செயல்படுகிறார்.
அ.தி.மு.க.,வில், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கும், பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire