அமெரிக்காவில் இரு போர் விமானங்கள் மோதி விபத்து
18 வைகாசி 2026 திங்கள் 07:43 | பார்வைகள் : 1621
அமெரிக்காவில் வான் சாகச நிகழ்ச்சியின்போது, இரு போர் விமானங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானிகள் 4 பேரும் உயிர்தப்பினர்.
அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் உள்ள மவுண்டன் ஹோம் விமானப்படை தளத்தில் விமான சாகச நிகழ்ச்சி 18.05.2026 நடந்தது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட இந்த சாகச நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இரு போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாகின.
இரு விமானங்களும் உடைந்து கீழே விழுந்ததில் அப்பகுதியில் கரும்புகை கிளம்பியது.
விமானம் விபத்துக்குள்ளானபோது, சாதுரியமாக செயல்பட்ட விமானிகள், பத்திரமாக பாராசூட் மூலமாக வெளியேறினர்.
இதனால், எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து, நேற்று நடைபெறவிருந்த மற்ற சாகச நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire