பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக கோரிக்கைகள்
18 வைகாசி 2026 திங்கள் 12:30 | பார்வைகள் : 1808
பிரித்தானியாவில், ஆளும் லேபர் கட்சி சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில் ஆயிரக்கணக்கான இருக்கைகளை இழந்ததைத் தொடர்ந்து, பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.
இந்த சூழலை பயன்படுத்திக்கொண்டு பிரதமர் பதவியைப் பிடிக்க திட்டமிட்டுவருகிறார்கள் அரசியல்வாதிகள் சிலர்.
அவர்களில், சமீபத்தில் தனது சுகாதாரச் செயலர் பதவியை ராஜினாமா செய்த வெஸ் ஸ்ட்ரீட்டிங்கும், கிரேட்டர் மான்செஸ்டர் மேயரான ஆன்டி பர்னாமும் முக்கியமான நபர்கள்.
அதாவது, இருவருமே மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக பிரெக்சிட் என்னும் விடயத்தைக் கையில் எடுத்துள்ளார்கள்.
பிரெக்சிட் என்பது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைக் குறிக்கும் பதம் என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.
இந்நிலையில், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையவேண்டும் என்னும் வாதத்தை முன்வைத்து பிரதமர் பதவியை பிடிக்க முயல்கிறார்கள் ஸ்ட்ரீட்டிங்கும் ஆன்டியும்.
ஆன்டி நாடாளுமன்ற உறுப்பினரே அல்ல. ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக அவர் மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
ஆனால், அவரால் தன் தொகுதியில் பிரெக்சிட் குறித்து பிரச்சாரம் செய்து வெற்றி பெற முடியாது.
ஏனென்றால், அவர் போட்டியிட திட்டமிட்டுவரும் மேக்கர்ஃபீல்ட் தொகுதி, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும், அதாவது, பிரெக்சிட் வேண்டும் என வாக்களித்த தொகுதி.
ஆக, பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையவேண்டும் என்னும் வாதத்தை முன்வைத்து பிரதமர் பதவியை பிடிக்க முயலும் ஆன்டி, அதே வாதத்தை தன் தொகுதியில் வைக்கப்போவதில்லை என்கிறார்.
அப்படி அவர் பிரெக்சிட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்தால், தன் தொகுதியில் வெற்றி பெற முடியாது. அப்படி அவர் தன் தொகுதியில் வெற்றி பெறவில்லையென்றால் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது.
அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவில்லையென்றால், பிரதமர் பதவிக்கான போட்டியில் நுழையமுடியாது.
ஆக மொத்தத்தில், ஆன்டி பிரதமர் பதவியைப் பிடிக்க பிரெக்சிட் குறித்த வாதம் வேண்டும், ஆனால், தன் தொகுதியில் வெற்றி பெற பிரெக்சிட்டைக் குறித்து பேசக்கூடாது.
ஆகவே, பிரெக்சிட்டை வைத்து இரட்டை வேடம் போட்டு பிரதமர் பதவியைப் பிடிக்க முயல்கிறார் ஆன்டி என்பது தெளிவாகத் தெரிகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire