அம்மா உணவகங்களை சீரமைக்க முதல்வர் உத்தரவு
19 வைகாசி 2026 செவ்வாய் 08:15 | பார்வைகள் : 1882
தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களை சீரமைத்து, புதுப்பிக்க, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது, சென்னை மாநகராட்சி சார்பில் 383; மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் சார்பில், 237 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சமீப காலமாக, இவற்றில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை. இது முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இது குறித்து, முதல்வர் விஜய், சம்பந்தப்பட்ட துறை செயலர்களுடன் கலந்தாலோசித்தார். அதன்பின், அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
சுவையுடன் கூடிய, தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மறு சீரமைப்பு மற்றும் பொருட்கள் கொள்முதலுக்கு, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ளலாம் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire