செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம்
19 வைகாசி 2026 செவ்வாய் 11:31 | பார்வைகள் : 1528
2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சியில், போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறையில் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோர் மீது பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் உட்பட 4 பேர் மீது வழக்கு மாநில அரசு அனுமதி இல்லாததால் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்கவில்லை.
இந்த நிலையில், போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 15-ம் தேதி அமலாக்கத்துறை சார்பில் 3 பக்க கடிதம் தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கவர்னரிடம் அனுமதி கோரப்பட்ட நிலையில், மாநில அரசிடமே அனுமதி பெற வேண்டும் என்ற விதிகளின்படி தற்போது அனுமதி கேட்கப்பட்டுள்ளது.புகார் தொடர்புடைய தகுந்த ஆதாரங்கள், ரகசிய விசாரணை குறிப்புகள், புகார் நகல் ஆகியவற்றை உள்ளடக்கிய பென் டிரைவை இணைத்து, தலைமைச் செயலாளர் சாய் குமாருக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த கடிதம் தலைமைச் செயலாளர் அலுவலகத்தால் முறையாகப் பெறப்பட்டு, அதற்கான ஒப்புகை பெறப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது..செந்தில்பாலாஜி ஆளும் கட்சி மற்றும் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்ததால், முந்தைய திமுக அரசு அனுமதி வழங்குவதில் தாமதம் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
நீதிமன்றம் முறையாக விசாரணையைத் தொடங்க ஏதுவாக, உடனடியாக ஒப்புதல் வழங்குமாறு தவெக தலைமையிலான மாநில அரசை அமலாக்கத்துறை தற்போது வலியுறுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி மீதான விசாரணைக்கு தவெக அரசு அனுமதி அளிக்குமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire