அமெரிக்காவை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு - மூவர் பலி
19 வைகாசி 2026 செவ்வாய் 08:05 | பார்வைகள் : 1608
அமெரிக்காவின் சென்டியாகோவிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றில் அந்நாட்டு நேரப்படி 18.05.2026 இரவு 11.53 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களின் சடலங்கள் பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தேகநபர்களில் ஒருவர் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 17 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களாவர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் மிகவும் ஆபத்தானதொரு நிலைமையாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது பலத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire