ஜப்பானில் நிலநடுக்கம்
20 வைகாசி 2026 புதன் 11:00 | பார்வைகள் : 1600
ஜப்பானின் ககோஷிமா மாகாணத்திலுள்ள தென்மேற்கு தீவுப் பகுதியான அமாமியை புதன்கிழமை 20.05.2026 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உலுக்கியுள்ளது. எனினும், இதனால் சுனாமி ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் 11:46 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இது ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது.
ஒகினாவா மாகாணத்தின் பிரதான தீவுக் கடற்கரையிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜப்பானிய நில அதிர்வுத் தீவிர அளவுகோலின்படி (7 புள்ளிகளைக் கொண்டது), ககோஷிமா மாகாணத்தின் தென்முனையில் உள்ள யோரோன் பகுதியில் இந்த நிலநடுக்கம் 5 ஆவது மட்டமாகப் பதிவாகியுள்ளது.
இருப்பினும், மதியம் 12:20 மணிவரையிலான தரவுகளின்படி, நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளோ அல்லது பாரிய சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை என உள்ளூர் அதிகாரிகளும் பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire