22 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக சாம்பியன் பட்டம்- சாதனை படைத்த ஆர்சனல்
20 வைகாசி 2026 புதன் 13:45 | பார்வைகள் : 1547
ஆர்சனல் கிளப் அணி 22 ஆண்டுகளுக்கு பின் பிரீமியர் லீக் பட்டம் வென்று சாதனை படைத்தது.
எமிரேட்ஸ் மைதானத்தில் நடந்த பர்ன்லே அணிக்கு எதிரான பிரீமியர் லீக் போட்டியில் ஆர்சனல் (Arsenal) அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் Kai Havertz அடித்த கோல், ஆர்சனல் அணியின் வெற்றி கோலாக மாறியது.
இதன்மூலம் ஆர்சனல் அணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக் பட்டத்தை வென்றது.
மிக்கேல் ஆர்டெட்டா (Mikel Arteta) ஒரு மேலாளராக இந்தக் கிண்ணத்தை வென்ற முதல் முன்னாள் பிரீமியர் லீக் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அவர் 2011 முதல் 2016 வரை அந்த அணிக்காக விளையாடிய நிலையில், டிசம்பர் 2019-யில் கன்னர்ஸ் அணியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆர்சனல் அணி இதுவரை நான்கு பிரீமியர் லீக் பட்டங்களை வென்றுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire