சமுவேல் பட்டி படுகொலை - L’Abandon திரைப்படம்!!
20 வைகாசி 2026 புதன் 17:44 | பார்வைகள் : 1930
CNEWS, Europe 1 மற்றும் JDD‑க்காக CSA நிறுவனம் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, 79% பிரெஞ்சு மக்கள் «L’Abandon» திரைப்படத்தை
கல்லூரி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் திரையிடுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
«L’Abandon» திரைப்படம், 2020 16‑ஆம் தேதி Conflans‑Sainte‑Honorine (Yvelines)‑இல், இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த, வரலாற்று‑புவியியல் ஆசிரியர் சமுவேல் பட்டியின் (Samuel Paty) கடைசி பதினொரு நாட்களைப் பதிவு செய்கிறது.

கல்வி அமைச்சகத்தின் நிலைப்பாடு
கல்வி மற்றும் தொழில்முறை பயிற்சி அமைச்சர் Sabrina Agresti‑Roubache, திரைப்படம் ஆசிரியர்களுக்காக “கல்வி தொகுப்பாக” வழங்கப்படும் என தெரிவித்தார்.
அது கட்டாய திரையிடல் அல்ல,ஆனால் தன்னார்வ அடிப்படையில் பயன்படுத்தலாம்.
கருத்துக்கணிப்பு விவரங்கள்
ஆண்கள்80%, பெண்கள 79% ஆதரவு
18–24 வயது இளைஞர்கள் 91%, 50 வயதுக்கு மேல் மேல் 83%
25–34 வயது இளைஞர்கள் 69%, 35–49 வயது 73% — ஆதரவு குறைவாக
அரசியல் சார்ந்த பதில்கள்
Rassemblement National 84%
Les Républicains 82%
Renaissance 81%
Écologistes 81%
Parti Socialiste 77%
La France Insoumise 52% — கருத்து பிளவு
«L’Abandon» மே13‑ஆம் தேதி வெளியானது. முதல் வாரத்தில் 200 548 திரையரங்குகளில் திரைப்படத்தைப் பாரத்துள்ளனர் (CBO Box Office).
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire