ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தால் கை மேல் பலன்!
21 வைகாசி 2026 வியாழன் 05:14 | பார்வைகள் : 1494
ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடத்தப்பட்டால், நம் நாடு, 7 லட்சம் கோடி ரூபாயை சேமிக்க முடியும்,'' என, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தை ஆராயும் பார்லி., கூட்டுக்குழுவின் தலைவரும், லோக்சபா பா.ஜ., - எம்.பி.,யுமான பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுதும் ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை நடத்த மத்திய பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, 2024 டிசம்பரில் லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இது, பார்லி., கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பா.ஜ., லோக்சபா எம்.பி., பி.பி.சவுத்ரி தலைமையிலான, 41 பேர் அடங்கிய கூட்டுக்குழு இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசித்து வருகிறது.
பா.ஜ., ஆளும் குஜராத்தின் காந்திநகரில், மாநில தலைமை செயலர், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன், இந்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.இதன்பின், பி.பி.சவுத்ரி கூறியதாவது:
விரிவான அறிக்கையை தயாரிக்கும்படி குஜராத் அரசை அறிவுறுத்தி உள்ளோம். இது மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும். ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள் நடத்தப்பட்டால், நம் நாடு, 7 லட்சம் கோடி ரூபாயை சேமிக்க முடியும்.
மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1.6 சதவீதம் அதிகரிக்கும். சேமிக்கும் பணத்தை உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறை சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தலாம். இந்த விவகாரத்தில் நாங்கள் விரிவாக ஆய்வு செய்து வருகிறோம். கூட்டுக்குழு உறுப்பினர்களும் அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டின் நலனுக்காக செயல்படுவர் என, நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire