சமூக வலைத்தள சவாலால் அதிகரிக்கும் ஆபத்தான சாலை விதிமுறை மீறல்கள்!!
21 வைகாசி 2026 வியாழன் 07:30 | பார்வைகள் : 1774
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புதிய ஆபத்தான சவால் ஒன்று சாலை பாதுகாப்பு அதிகாரிகளை கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இளைஞர்கள் வட்டச்சந்திகளை நேராக நடுப்பகுதி வழியாக வேகமாக கடந்து செல்லும் காட்சிகளை காணொளியாக பதிவு செய்து, அதை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். மே மாதம் 8ம் திகதி முதல் ஆயிரத்திற்கும் அதிகமான காணொளிகள் ஒரே வகை இசையுடன் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாலை விபத்து மரணங்கள் கடந்த ஆண்டை விட ஏப்ரல் மாதத்தில் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், இந்த செயற்பாடு மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். Mont-de-Marsan பகுதியில் காவல்துறையினர் வட்டச்சந்தி அருகே வாகன ஓட்டிகளை கண்காணித்து வருகின்றனர். “அதிக வேகத்தில் வட்டச்சந்தியை கடக்கும்போது ஓட்டுநரும் பயணிகளும் மட்டுமல்லாது, எதிரே வரும் பொதுமக்களும் பாதிக்கப்படலாம்” என காவல்துறை அதிகாரி அர்னோ லவின் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவுவதால் இளைஞர்களிடம் “அனைவரும் செய்வதை நாமும் செய்ய வேண்டும்” என்ற மனப்போக்கு உருவாகி வருவதாக சாலை பாதுகாப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. புகழ் பெறும் நோக்கில் பாதுகாப்பு விதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் அவை கவலை வெளியிட்டுள்ளன.
இந்த சட்டவிரோத செயலுக்காக சாலைக்கு வெளியே வாகனம் செலுத்துதல் மற்றும் வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 270 யூரோக்கள் வரை அபராதமும், ஓட்டுநர் உரிமம் இடைநீக்கமும் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan