டில்லியில் இன்று கூடுகிறது கூட்டம்; மத்திய அமைச்சரவையில் மாற்றம் வருமா என எதிர்பார்ப்பு
21 வைகாசி 2026 வியாழன் 11:03 | பார்வைகள் : 1710
அமைச்சரவை மாற்றம் குறித்த பரபரப்புக்கு மத்தியில், இன்று (மே 21) டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி 3.0 அமைச்சரவையின் விரிவாக்கம் மற்றும் மாற்றியமைப்பு குறித்த யூகங்கள் நிலவி வருகிறது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் இன்று (மே 21) டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து மத்திய அமைச்சரவை அமைச்சர்கள், தனிப் பொறுப்பு வகிக்கும் இணை அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அரசு திட்ட பணிகள் செயலாக்கம், மேற்காசிய போர் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அமைச்சரவை மாற்றம் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire