தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்
21 வைகாசி 2026 வியாழன் 12:08 | பார்வைகள் : 1434
தேர்தலில் 108 இடங்களை பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பாண்மையை நிரூபித்தது. இதையடுத்து தமிழக முதல்-அமைச்சராக விஜய் கடந்த 9-ந்தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
முதல்-அமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16-ந் தேதியன்று துறைகள் ஒதுக்கப்பட்டன.
எனினும், வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், த.வெ.க. மற்றும் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரை இன்று விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் இணையவுள்ளதாக மக்கள் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத், அவிநாசி எம்.எல்.ஏ. கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ் உள்ளிட்ட 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் தவெக ஆதரவு கட்சி தலைவர்களான திருமாவளவன், பெ.சண்முகம் மற்றும் வீரபாண்டியன் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர் பதவியேற்றுள்ளனர். புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்கள் விவரம் பின்வருமாறு;
அமைச்சர்கள் பட்டியல்
1.ஸ்ரீநாத் (தூத்துக்குடி தொகுதி)
2.கமலி.எஸ். (அவினாசி)
3.சி.விஜயலட்சுமி (குமாரபாளையம்)
4.ஆர்.வி.ரஞ்சித்குமார் (காஞ்சீபுரம்)
5.வினோத் (கும்பகோணம்)
6.ராஜீவ் (திருவாடானை)
7.பி.ராஜ்குமார் (கடலூர்)
8.வி.காந்திராஜ் (அரக்கோணம்)
9.பி.மதன் ராஜா (ஒட்டப்பிடாரம்)
10.கே.ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்)
11.எஸ்.ராஜேஷ்குமார் (காங்கிரஸ், கிள்ளியூர்)
12.எம்.விஜய் பாலாஜி (ஈரோடு)
13.டி.லோகேஷ் தமிழ்செல்வன் (ராசிபுரம்)
14.ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு)
15.ரமேஷ் (ஸ்ரீரங்கம்)
16.பி.விஸ்வநாதன் (காங்கிரஸ், மேலூர்)
17.ஆர்.குமார் (வேளச்சேரி)
18.கே.தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்)
19. வி.சம்பத்குமார் (கோவை வடக்கு)
20.ஜெ.முகமது பர்வாஸ் (அறந்தாங்கி)
21.டி.சரத்குமார் (தாம்பரம்)
22.என்.மரிய வில்சன் (ஆர்.கே.நகர்)
23.கே.விக்னேஷ் (கிணற்றுக்கடவு)
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire