எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க 700 மில்லியன் யூரோக்கள் அளவிலான புதிய திட்டங்கள் அறிவிப்பு!!
22 வைகாசி 2026 வெள்ளி 07:30 | பார்வைகள் : 3466
எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தத்தை சமாளிக்கும் நோக்கில், பிரதமர் Sébastien Lecornu தலைமையிலான அரசு புதிய நிவாரண திட்டங்களை அறிவித்துள்ளது.சுமார் 700 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான கூடுதல் உதவித் திட்டங்கள் வெளியிடப்பட்டன. இதன் மூலம் மொத்தமாக 1.2 பில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய திட்டங்களின் கீழ், மீனவர்கள், விவசாயிகள், போக்குவரத்து துறை மற்றும் கட்டுமானத் துறை (BTP) உள்ளிட்ட அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் உதவித்தொகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் Philippe Tabarot, டக்ஸி ஓட்டுநர்களுக்காக அக்டோபர் 1 முதல் “பசுமை போனஸ்” திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்தார். மின்சார வாகனங்களை வாங்கும் டக்ஸி ஓட்டுநர்களுக்கு 5,500 யூரோக்கள் வரை உதவி வழங்கப்படும் என கூறப்பட்டது.
எரிசக்தி அமைச்சர் Maud Bregeon, மீனவர்களுக்கு டீசல் லிட்டருக்கு 30 முதல் 35 சென்ட் வரை வழங்கப்பட்டு வந்த மானியம் மேலும் மூன்று மாதங்களுக்கு தொடரும் என தெரிவித்தார். அதேபோல், விவசாயிகளுக்கும் லிட்டருக்கு 15 சென்ட் உதவி அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும். மேலும், 50-க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட சிறிய கட்டுமான நிறுவனங்களுக்கும் இந்த உதவித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 30,000 நிறுவனங்கள் பயனடையும் என அரசு கணித்துள்ளது.
அதேவேளை, சுகாதாரத் துறையில் பணிபுரியும் வீட்டிலேயே சேவை வழங்கும் ஊழியர்கள் மற்றும் அதிக பயணம் மேற்கொள்ளும் பணியாளர்களுக்காக கூடுதல் உதவிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு வழங்கும் எரிபொருள் போனஸ் தொகையின் உச்சவரம்பு 300 யூரோக்களில் இருந்து 600 யூரோக்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியர்கள் தனிப்பட்ட வாகனங்களை சேவைக்காக பயன்படுத்தும் போது வழங்கப்படும் பயணச் செலவுத்தொகையும் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி மற்றும் பொது கணக்குத் துறை அமைச்சர் David Amiel அறிவித்தார். “பணியில் தொடர்ந்து ஈடுபட்டு நாட்டின் செயல்பாட்டை தாங்கி நிற்கும் மக்களை பாதுகாப்பதே அரசின் முக்கிய நோக்கம்” என பிரதமர் செபாஸ்தியன் லெகோர்னு வலியுறுத்தினார்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire