திரும்ப பெறப்படும் Steaks hachés!!
22 வைகாசி 2026 வெள்ளி 14:38 | பார்வைகள் : 2337
நாடு முழுவதும் Carrefour கடைகளில் விற்கப்பட்ட சில உறைபனிப் (surgelés) மாட்டிறைச்சி ஸ்டேக் ஹட்சே (steaks hachés) பொருட்களில் சிறிய உலோகத் துண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக அவை திரும்பப் பெறப்படுகின்றன. அவற்றை சாப்பிட வேண்டாம் என்று Rappel Conso இன்று எச்சரித்துள்ளது.
“இந்த இறைச்சியை உட்கொண்டால் காயங்கள் அல்லது விரும்பத்தகாத உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரும்பப்பெறுதல் நாடு முழுவதும் உள்ள Carrefour மற்றும் Match கடைகளில் விற்கப்பட்ட பொருட்களுக்கு பொருந்தும்.
பாதிக்கப்பட்ட பொருள்:
Carrefour Extra பிராண்டின் 10 உறைபனிப் மாட்டிறைச்சி ஸ்டேக் ஹட்சேகள் ஒவ்வொன்றும் 100 கிராம்களாகும்.
இந்தப் பொருள் 2026 ஏப்ரல் 23 முதல் மே 20 வரை விற்பனை செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட விவரங்கள்:
GTIN: 3270190020103
Lot: 160920003
பயன்படுத்த வேண்டிய கடைசி தேதி: 02 ஏப்ரல் 2027
ஏதேனும் சந்தேகம் இருந்தால், வாடிக்கையாளர் சேவையை 08.05.90.80.70 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். (திங்கள் முதல் சனி வரை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை, கூடுதல் கட்டணமின்றி அழைக்கலாம்.)
மேலும், இந்தப் பொருளை திருப்பி அளித்தால் பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரும்பப்பெறுதல் நடவடிக்கை 2026 ஜூலை 20 அன்று முடிவடையும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan