முதல்வர் விஜயுடன் ஆலோசனை நடத்திய விசிக தலைவர் திருமா
23 வைகாசி 2026 சனி 08:22 | பார்வைகள் : 996
முதல்வர் விஜயுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 30 நிமிடம் ஆலோசனை நடத்தினார்.
தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள், கடந்த 10ம் தேதி பதவியேற்றனர். மீதமுள்ள அமைச்சர்களை நியமிக்கும் பணிகளில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில், 23 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில், காங்கிரசுக்கு இரு அமைச்சர் பதவிகள் தரப்பட்டன.
தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவற்றுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. வி.சி.க.,வை சேர்ந்த வன்னி அரசு, முஸ்லீம் லீக்கை சேர்ந்த ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
பதவி ஏற்பு முடிந்த பின், தலைமைச் செயலகத்துக்கு, முதல்வர் விஜய் வந்தார். அவரை தொடர்ந்து, வி.சி.க., தலைவர் திருமாவளவனும் வந்தார். முதல்வர் அறையில், இருவரும், 30 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்தினார்.
அமைச்சரவையில் வி.சி.க., மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு இடம் வழங்கிய பின், அமைச்சரவை முழுமை பெற்றதால், தன் மகிழ்ச்சியை, திருமாவளவனுடன் முதல்வர் விஜய் பகிர்ந்துள்ளார்.
ஆலோசனையின்போது, வி.சி.க., பற்றி, சமூகவலைதளத்தில், தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜா பதிவிட்ட கருத்து குறித்து திருமாவளவன் வருத்தம் அடைந்துள்ளார். இது தொடர்பாக, சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan