மகனின் திருமணத்தில் பங்கேற்கவில்லை - டொனால்ட் ட்ரம்ப்
23 வைகாசி 2026 சனி 07:05 | பார்வைகள் : 1666
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் (48 வயது). இவருக்கு பெட்டினா ஆண்டர்சன் என்வருடன் இந்த வார இறுதியில் கரீபியன் கடலில் உள்ள பஹாமாஸ் தீவில் திருமணம் நடைபெற உள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கு இது இரண்டாவது திருமணமாகும். மிக நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் பங்கேற்க உள்ளனர். இந்த திருமணத்தில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அவர் (மகன்) நான் வர வேண்டும் என்றுதான் விரும்புகிறார். ஆனால், இது எனக்குச் சரியான நேரமல்ல.
ஈரான் போர் விவகாரம் மற்றும் பல முக்கியப் பணிகள் எனக்கு உள்ளன. நான் திருமணத்தில் கலந்துகொண்டால், ஒரு பெரும் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் தீவிற்குச் சென்று கொண்டாடுகிறார் என்று கடுமையாக விமர்சிப்பார்கள்.
ஒருவேளை நான் செல்லவில்லை என்றால், சொந்த மகன் திருமணத்திற்குக் கூட செல்லாதவர் என் விமர்சிப்பார்கள்" என்று டிரம்ப் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய ஈரான் போர் காரணமாக அமெரிக்காவில் எரிபொருள் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.
இதனால் அதிபர் ட்ரம்ப்பின் மக்கள் செல்வாக்கு சரிந்து வருவதாகத் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire