தாமஸ் ஆல்வா எடிசனை மிஞ்சிய இந்திய விஞ்ஞானி!
25 வைகாசி 2026 திங்கள் 08:29 | பார்வைகள் : 1435
டில்லியை சேர்ந்த ஐஐடி பட்டதாரியான குருதேஜ் சந்த், அமெரிக்காவிற்கு பிஎச்டி படிப்புக்காக சென்றவர் அங்கு விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனையை மிஞ்சி அமெரிக்காவின் 7வது மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளராக உருவெடுத்துள்ளார்.
இந்தியா தொழில்நுட்பத் துறை பல்வேறு சாதனைகளை எட்டி உள்ளது. உலகளவில் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் இந்தியர்கள் வலம் வருகின்றனர். உலகையே ஆட்டி படைக்கும் கூகுளின் தலைமை பொறுப்பில் இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை திகழ்ந்தார். இவரைப் போன்றே அமெரிக்காவில் புகழப்படும் மற்றுமொரு இந்தியராக உருவெடுத்துள்ளார் குருதேஜ் சந்த். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார்.
அப்படி இவர் என்ன செய்தார் என கேட்கலாம். விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் காப்புரிமை சாதனையான 1093-ஐ முறியடித்து, அமெரிக்காவில் மட்டும் 1400-க்கும் அதிகமான காப்புரிமைகளையும், உலகளவில் 2200-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளையும் பெற்றுள்ளார். உலகளவில் அதிக காப்புரிமைகளை வைத்துள்ள டாப் கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவர். அமெரிக்க வரலாற்றில் 7வது அதிக காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பாளராக இவர் உயர்ந்துள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த குர்தேஜ் சிங் சந்து, பஞ்சாப் மாநிலம் அமர்தசரஸில் பிறந்து வளர்ந்தவர். குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடங்கி, பின்னர் டில்லி ஐஐடி-யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முதுகலை பட்டம் (M.Tech) பெற்றார். பிஎச்டிக்காக அமெரிக்காவிற்குச் சென்றவர் அங்குள்ள 'வட கரோலினா பல்கலைக்கழகத்தில்' இயற்பியலில் தனது முனைவர் பட்டத்தை (Ph.D) முடித்தார்.
பின்னர் உலகளாவிய மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சியில் முக்கிய நபர் ஆனார். 35 ஆண்டுகளாக மைக்ரான் டெக்னாலஜியுடன் இணைந்து பணியாற்றுகிறார். நவீன எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினித் துறையில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் மாபெரும் கண்டுபிடிப்புகளை இவர் செய்துள்ளார். நவீன டிஜிட்டல் யுகத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் டேட்டா சென்டர்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன 'மெமரி சிப்கள்', சிறியதாகவும், வேகமாகவும் செயல்பட இவரது கண்டுபிடிப்புகள் மிகவும் அடிப்படையாக அமைந்துள்ளன. இப்போது அந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் வழிநடத்தி கொண்டிருக்கிறார்.
குர்தேஜ் சிங் சந்துவின் அசாதாரண பயணத்தை சுட்டிக்காட்டி, உலகளவில் இந்தியர்களின் திறமை பறைசாட்டப்படுவதை வலைதள வாசிகள் வைரலாக்கி வருவதோடும் அவரை பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire