தமிழகத்தில் நடந்திருப்பது சினிமா சுனாமி!
25 வைகாசி 2026 திங்கள் 12:17 | பார்வைகள் : 1591
தமிழகத்தில் நடந்திருப்பது அரசியல் சுனாமி அல்ல;சினிமா சுனாமி. எனவே, தமிழக வெற்றிக் கழக அரசு ஐந்தாண்டுகள் நீடிக்காது, என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை, அறிவாலயத்தில் நேற்று நடந்த, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில், அவர் பேசியதாவது:
சினிமா கவர்ச்சியால், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராகியுள்ளார். இந்த தேர்தலில் நடந்திருப்பது அரசியல் சுனாமி அல்ல; சினிமா சுனாமி. நிச்சயமாக த.வெ.க., அரசு ஐந்தாண்டுகள் நீடிக்காது.
புதிய பொம்மையை பார்த்தால், வேண்டும் என அடம் பிடிக்கும் குழந்தைக்கு, அது இரண்டு நாட்களில் அலுத்து விடும். பொம்மை வேண்டும் என்பதுபோல, நடிகரை பார்த்து சென்ற தமிழக மக்கள், தாயிடம் வருவது போல தி.மு.க.,விடம் திரும்பி வருவர்.
தி.மு.க.,வின் தோல்விக்கு பெரும்பான்மையான மக்கள் வருத்தப்படுகின்றனர்.தி.மு.க., எனும் பேரியக்கத்திற்கு இளைஞர்களே எதிர்காலம். காலத்திற்கேற்ப தி.மு.க.,வின் திட்டத்தையும், செயல்முறையையும் மேலும் மேம்படுத்த வேண்டும்.
சமூக வலைதளங்களை திறம்பட பயன் படுத்துவோம். இளைஞர்களிடம் நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும், ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire