பரிஸில் ஆடம்பரப் பொருட்கள் கடையில் காரால் உடைத்து கொள்ளை – 200,000 யூரோக்கள் இழப்பு மதிப்பீடு!!
25 வைகாசி 2026 திங்கள் 15:06 | பார்வைகள் : 3215
பரிஸின் 8ஆம் வட்டாரத்தில் உள்ள பிரபல ஆடம்பரப் பொருட்கள் மறுவிற்பனை கடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கார் மோதல் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. rue du Faubourg Saint-Honoré பகுதியில் அமைந்துள்ள “Luxury Dress Code” என்ற கடையின் கண்ணாடி முன்பகுதியை கொள்ளையர்கள் காரை பின்னோக்கி ஓட்டி உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் தகவலின்படி, இன்று 25ம் திகதி அதிகாலை சுமார் 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கண்காணிப்பு கமெரா காட்சிகளில், முகமூடி மற்றும் கையுறை அணிந்திருந்த இரு சந்தேகநபர்கள் காரில் வந்திருந்து, பல உயர்தர கைப்பைகளை திருடிச் சென்றது பதிவாகியுள்ளது. பின்னர் அவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தால் சுமார் 2 இலட்சம் யூரோக்கள் அளவிலான நட்டம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பரிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire