RCB அணியில் காத்திருக்கும் மிகப்பெரிய மாற்றம் - களமிறங்குவாரா பில் சால்ட்?
26 வைகாசி 2026 செவ்வாய் 08:12 | பார்வைகள் : 1890
2026 ஆம் ஆண்டின் ஐபிஎல் தகுதிச் சுற்றில் ஆர்சிபி அணி சார்பாக பில் சால்ட் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அதிரடியான தொடக்க வீரராக களமிறங்கி வந்த ஃபில் சால்ட் காயம் காரணமாக இங்கிலாந்து நாட்டிற்கு திரும்பிச் சென்றார்.
காயம் காரணமாக ஃபில் சால்ட் பெரும்பாலான லீக் போட்டிகளில் விளையாடாததை தொடர்ந்து அவருக்கு பதிலாக ஜேக்கப் பெத்தல் களமிறக்கப்பட்டார்.
ஆனால் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாததை தொடர்ந்து சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வெங்கடேஷ் அய்யர் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார்.
ஆர்.சி.பி அணிக்காக கடைசி லீக் போட்டியில் விளையாடிய வெங்கடேஷ் அய்யர் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
இந்நிலையில் விரலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று மீண்டும் ஃபில் சால்ட் இந்தியாவுக்கு திரும்பியுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று போட்டியில் ஃபில் சால்ட் களமிறங்குவாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
இது தொடர்பாக ஆர்.சி.பி கேப்டன் ரஜத் பட்டிதாரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ஃபில் சால்ட் முழு உடல் தகுதியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால் நாங்கள் இன்னும் விளையாடும் 11 வீரர்கள் யார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று பதிலளித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire